Posts

Showing posts from July, 2021

பிறருக்கு அளியுங்கள்

பெரும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலைக்காரர்களை வைத்து கொள்வார்கள் . தாங்கள் செய்ய வேண்டிய  வேலைகளை அவர்களை வைத்து முடித்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். தங்களுக்கு வேண்டிய உரிமை அனைத்தையும் பெற்று கொள்வார்கள்.  சக வேலையாட்களில் யாராவது ஒருவர் தனது முயற்சியால் உயர்ந்து வந்து விட்டான் என்றால் அது அவர்களுக்கு பிடிக்காது. அவனை ஒதுக்கி விட்டு வேறு வேலையாட்களை நியமிப்பதோடு அவனை வெறுக்கவும் செய்வார்கள்.  என்னயென்றால் தான் அனுபவித்ததை அவனும் அனுபவிப்பான் என்கிற ஒரு அகபாவம். அவர்கள் தங்கள் உரிமை பறி போய் விடுமோ ஒரு வித பயம். கதையின் கரு:  நீங்கள் விரும்பும் உரிமையை, முதலில் பிறருக்கு அளியுங்கள்.