Introduction of Rubber (ரப்பர் வந்தது எப்படி)
ரப்பர் வந்தது எப்படி??? பென்சிலால் தவறாக எழுதிவிட்டால் , இன்று நாம் சுலபமாக பயன்படுத்தக்கூடிய ரப்பர் கண்டுபிடிப்புக்கு பின்னால் பெரிய கதையே இருக்கிறது . இன்று நாம் பயன்படுத்தும் ஏரேசர் எனப்படும் ரப்பர் , செயற்கை ரப்பரில் இருந்து செய்யப்படுகின்றன . சரி , ரப்பர் மட்டும் பென்சில் கறையை எப்படி நீக்குகிறது ? என ஆராயலாம் . ரப்பர் காகிதத்தைவிட அதிக ஒட்டும்தன்மை கொண்டது . அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்து தேய்க்கும்போது காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராபைட் ( பென்சில்முனை கிராபைட்டால்தான் செய்யப்படுகிறது ), ரப்பரில் ஒட்டிக்கொள்கிறது . அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து , சுத்தமாகிவிடுகிறது . இப்போது நாம் பயன்படுத்தும் ரப்பர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் காகிதத்தில் பென்சில் அல்லது மரக்கரியால் எழுதியதை அழிக்க மெழுகு போன்ற ஒரு பொருளை பயன்படுத்தினார்கள் . பர்ச்மெண்ட் , பாப்பிரஸ் தாள்களில் மை பேனாவால் எழுதியதை மணல் கற்கள் , பியூமிஸ் போன்ற மாவுக்கற்களை வைத்து தேய்த்து அளித்துள்ளார்கள் . பிரெட் துண்டுகளைக்கூட ரப்ப...