வாடன் சம்பா (Vadan Samba Rice)
குழந்தைகளுக்கு ஊட்டும்
முதல் சோறு
மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்படும் நெல்ரகம், வாடன் சம்பா.
வறட்சியை தாங்கிக்கொண்டு, மழை பெய்யும்போது உள்வாங்கி வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. 140 நாள் சாகுபடி காலம் கொண்டது. இந்த நெல் ரகம்.
மஞ்சள் மற்றும் பழுப்பு நிற அரிசியை கொண்ட நீண்ட கால பயிர் ஆகும். 4 அடி உயரம் வரை வளரக்கூடியது.
ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும், ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு 25 மூடை வரை மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை.
இயற்கையாகவே நோய் எதிர்ப்புசக்தி கொண்ட ரகம் இது. மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால், 10 நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.
சன்ன ரகமாகவும், சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு அதிகம் விரும்பப்படுகிறது. உணவு திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகாரம் செய்ய விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். மிகுந்த ருசியுடன் இருப்பதால் மக்களிடையே வாடன் சம்பா பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அத்துடன் மருத்துவ குணமும் கொண்டது. மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துகொள்ளுபவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். அதற்கும், பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசி கஞ்சி வைத்து கொடுக்கும் பழக்கம் கிராம பகுதிகளில் இருந்து வருகிறது.
குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியை தெரிந்தெடுக்கிறார்கள். அதற்கு காரணம் விரைவில் ஜீரணம் ஆவதும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளது அதனால் தான்.
Comments
Post a Comment