கார் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு (Car Rusting Solution)

கார் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு 

காரில் துருபிடிக்க முதல் காரணம் உப்பு தண்ணீர் தான். சில இடங்களில் காரை கழுவ உப்பு தண்ணீர் மட்டுமே உபயோகிக்கும் பட்சத்தில் கழுவியதும் துணியால் சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும்.

உப்பு தண்ணீர் தேங்கிய இடத்தில் உடனடியாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். உப்பு தண்ணீரில் அடிக்கடி கார் கழுவுவதை தவிர்த்து நல்ல தண்ணீரில் வெறுமனே துடைத்து வந்தால் கூட போதும்.

சக்கரம் அமைந்துள்ள உள்பகுதி மற்றும் உள்பகுதியில் மேட்பிளாப் உள்ள இடங்களில் அதிகமாக மண் மற்றும் சேறு போன்றவை தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன. மண் மற்றும் சேறு தொடர்ந்து தங்கும் பட்சத்தில் அங்கு துருப்பிடிக்க தொடங்கி விடும். ஆகவே இப்பகுதியில் மண் மற்றும் சேறு தங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

என்ஜின்களில் கவுல் பேனல், பேட்டரி டிரே மற்றும் ஸ்டிரட் மவுட்டிங் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புகள் அதிகம். விரைவாக துருபிடிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. ஆகவே இந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



கார் உள்ளே பயன்படுத்தப்படும் விரிப்பில் மண் மற்றும் தண்ணீர் தேங்க விடாமல் அடிக்கடி சுத்தம் செய்து வைக்க வேண்டும். ஏன் என்றால் இங்கு மண் மற்றும் தண்ணீர் தொடர்ந்து தங்கும் பட்சத்தில் துருபிடிக்க தொடங்கி விடும்.

மழைக்காலத்தில் தண்ணீர் அதிகமாக உள்ள பகுதியில் காரை தொடர்ந்து ஓரே இடத்தில் நிறுத்தி வைக்க கூடாது. அப்படி நிறுத்தி வைக்கும் பட்சத்தில் பிரேக் சிஸ்டத்தில் உள்ள கேரியர் பிளேட் எளிதாக துருப்பிடித்து விடும்.

காரின் அடிபகுதியில் மண் மற்றும் சேறு அதிகம் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏன்னென்றால் சஸ்பென்ஷன் பகுதி மற்றும் புகை வெளியேற்றும் பகுதிகளிலும் விரைவாக துருபிடிக்க வாய்ப்பு உள்ளது.

கார்களுக்கு வருடம் ஒரு முறை ஆன்டி ரஸ்ட் கோட்டிங் அடிப்பது நல்லது. அது காரை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்க உதவும்.


Comments

Popular posts from this blog

எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்

வாடன் சம்பா (Vadan Samba Rice)