எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்
நாம் சாதாரணமாக கேட்கிற ஒலி என்பது , காற்று வழியாக அதிர்வுகள் காதுக்குள் புகுந்து உள்காதில் இருக்கும் காக்லியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்கு செல்கின்றன . அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலியானது நரம்புக்கு தகவல் கடத்தப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது . ஆனால் , ஏகப்பட்ட எலும்புகள் இருக்கும் தலைப்பகுதிக்குள் எலுப்புகள் மூலமாகவும் ஒலி பயணிக்கலாம் . நாம் பேசும்போது , நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேருகிறது . இப்படி எலும்புகள் மூலம் ஓலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிகடத்தல் என்கிறார்கள் . ஒலிகளை அதிர்வுகளாக மாற்றி தலையில் எலும்புகளுக்கு கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும் . இந்த தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன . ஆனால் , விலை சற்று அதிகம் . காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்லியா பகுதிக்கு தகவல் செல்லும் . ஆனால் இதன் மருத்துவ பயன்படுத்தான் முக்கியமானது . செவித்திறன் குற...
Comments
Post a Comment