Property (ஏலம் விடப்படும் சொத்து)
ஏலம் விடப்படும் சொத்து விவசாய கடன் , கல்விக்கடன் , தொழில் முனைவோர் கடன் , வீடு கட்ட கடன் என மக்களின் பல தேவைகளை முன்னிட்டு வங்கிகள் கடன் தருகின்றன . அந்த வகையில் அடமான கடனும் ஒன்று . பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்த கடனை வங்கி வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் . நிலத்தின் பெயரிலோ , நிறுவனம் அல்லது வீட்டின் பெயரிலோ இந்த கடன்கள் வாங்கப்படும் . இம்மாதிரியான கடன்களுக்கு ஒழுங்காக தவணை கட்ட முடியாது போனால் உரிய காலக்கெடுவுக்கு பிறகு வங்கிகள் அந்த சொத்தை கையகப்படுத்தும் . இந்த மாதிரி கையகப்படுத்தும் சொத்துகள் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ஏலத்துக்கு விடப்படும் . ஏலத்துக்கு வரும் வீடுகள் , நிலம் , நிறுவனங்களை ஏல முறையில் வங்கிகள் விற்பனை செய்து , தங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கு எடுத்து கொள்ளும் . இது மட்டுமல்லாது வீடு கட்ட கடன் வாங்குபவர்களுக்கு மாத , தவணை கட்ட தவரும்போதும் , உரிய காலக்கெடுவுக்கு பிறகு வீடுகளை வங்கிகள் கையகப்படுத்தும் . இது பொதுவான நடைமுறை . பொதுவாகவே சொத்தை ஜப்தி செய்த ...