Jute Manufacturing (சணல் உற்பத்தி)
சணல் உற்பத்தி
பண்டைய காலத்தில் இருந்தே நமது நாட்டில் அதிகமாக பயிரிடப்பட்டு வருவது, சணல். பாலித்தீன் மற்றும் செயற்கை இழைகள் அதிகம் வர தொடங்கிய போது சணல் உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை கண்டது. ஆனால் நாளடைவில் இயற்கை இழைகளின் தேவை அதிகரித்த போது சணலின் சந்தை விரிவடைந்தது.
சணல் உற்பத்தியும் வளர்ச்சி பெற்றது. பருத்தி, கரும்பு, வாழை போன்றே சணலும் பணப்பயிர்களும் ஒன்று. அதன் பயன்களும் அதிகம். இந்தியாவுடன் பல நாடுகள் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததற்கு சணலும் ஒரு காரணம்.
பொதுவாக இரண்டு வகையான சணல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளை சணல், கோர்க்குரஸ் டோசா சணல்.
வெள்ளை சணல்தான் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கியமாக மேற்கு வங்காளத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளை சணல் அதிக உறுதி தன்மை கொண்டது. தற்போது வேதியல் பொருட்களை கொண்டு அதிகமாக விளம்பர பேனர்கள் தயாரிக்கப்படுகின்றன. இது மக்குவதற்கு நீண்ட காலம் எடுத்து கொள்ளும். ஆனால் தற்போது சுற்றுசூழல் ஆர்வலர்கள் சணலினால் ஆன விளம்பர பேனர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிற்கு பதிலாக சணலை பயன்படுத்துமாறு சுற்றுசூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் பிளாஸ்டிக்க்கை விட சணல் எளிதில் மக்கும் தன்மை கொண்டது. தாவர வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. டோசா சணல் எகிப்து, சிரியா, ஜோர்டான் போன்ற நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் சணலை அதிகமாக இறக்குமதி செய்கின்றன.
பண்டைய காலத்திலேயே சணல் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்திலேயே சணல் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. பேரரசர் அக்பர் காலத்தில் சணலினால் ஆன உடைகளை மக்கள் அணிந்துள்ளனர்.
குறிப்பாக வங்காள மக்கள் சணலை அதிகமாக பயன்படுத்தினர். அவர்கள் சணலை வைத்து துணிகளை தயாரிப்பதற்கு நூற்பு சக்கரங்களை பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த பொழுது சணல் வர்த்தகத்தை முதன்மையாக வைத்திருந்தனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சணலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இங்கிலாந்தில் அதிக விலைக்கு விற்றனர்.
சணல் பற்றி ஆய்வு செய்வதெற்கென்று மேற்கு வங்கத்தில் மத்திய சணல் ஆராய்ச்சி மையம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் மொத்த சணல் உற்பத்தியில் 55.1 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Comments
Post a Comment