Fish Department (மீன்வளத்துறை)

மீன்வளத்துறை

தமிழ்நாட்டின் மீன்வளத்துறை 1905-ஆம்  ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது

தமிழக மீனவர்களின் மீன்பிடி முறை மிக பழமையானதாக உள்ளதாக கூறிய ஆங்கிலேய அரசு, அதை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் புதிய மீன்பிடி முறைகளை, அதாவது மிதவெட்ப மண்டலத்தில் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை ஆராய தொடங்கியது. இழுவை மடிகள் பொருந்திய விசைப்படகு வைத்து அதிகம் மீன் புழங்கும் இடங்களை கண்டறிந்தது.

ஆரம்பகட்ட பரிசோதனைகளை வைத்து அப்போதைய ஆங்கிலேய அரசு, இந்தியா இழுவை மடிகள் பயன்படுத்த ஒரு தகுந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தது. இழுவை மடிகள் பொருந்திய விசைப்படகை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்தது.

நாட்டு விடுதலைக்கு பின் இந்திய அரசின் முதல் திட்டக்குழுவின் நோக்கம் மீன்வளத்தை அதிகரிப்பது, மீன் வள மக்களை ஏழ்மையில் இருந்து வெளியே கொண்டுவருவதுதான்.


மீன்வளத்துறையில் இப்போது சவால்கள் அதிகம் உள்ளன. மீன்பிடித்தலை முறைப்படுத்த முதலில் மீன் உயிரியலை பற்றி அறிய வேண்டும். அதாவது மீன் என்ன உணவை உட்கொள்கிறது. பருவநிலைக்கு ஏற்ப எங்கு நீந்துகிறது, எந்த காலகட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு, சில மீன் இனங்களை பற்றி தகவல் கிடைத்தாலும் பல மீன் இனங்களை பற்றி நமக்கு தகவல் இல்லை. இதை முழுமையாக அறிந்தால் எந்த காலத்தில், எந்த இடத்தில், எந்த வகையான வலைகளை பயன்படுத்த வேண்டும், எவற்றை பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடியும்.

அதே நேரத்தில் தற்போது மீன்வளத்தை கட்டுப்படுத்தும் அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக இத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

Comments

Popular posts from this blog

எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்

வாடன் சம்பா (Vadan Samba Rice)