டீ
வரலாறு தேயிலை சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டது . ஒரு நாள் சீன பேரரசர் ஷேனுங்கின் வெந்நீர் பானையில் , காற்றில் மிதந்து வந்த தேயிலை விழுந்தது . தேயிலையின் ரசம் கலந்த அந்த நீரை பேரரசர் மிகவும் ருசித்து பருகினார் . அந்த பானத்துக்கு அவர் வைத்த ச்சா , அதன் பொருள் விசாரிப்பது அல்லது சரிபார்ப்பது . அன்றிலிருந்து தேயிலையின் பயன்பாடு ஆரம்பமானது . ஆரம்ப காலங்களில் தேநீர் , மருத்துவ தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது . தேயிலையை சீனர்கள் கவனமாக வளர்த்தனர் . தேயிலை பறிக்கும் இளம் பெண்கள் பூண்டு , வெங்காயம் போன்றவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது . அவற்றின் வாசம் அந்த பெண்களின் விரல்களின் வழியாக , தேயிலையின் தன்மையை பாழாக்க கூடும் என்று அவர்கள் நம்பினார்கள் . முதல் டீ தொடக்க காலத்தில் க்ரீன் டீ என்ற வகை மட்டுமே புழக்கத்தில் இருந்தது . சீனாவில் இருந்து தேயிலையை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கினர் . இந்த கடல் கடந்த பயணமே பிளாக் டீ எனும் மற்றொரு வகை உருவாக காரணமாக அமைந்...