டீ



வரலாறு

தேயிலை சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டது. ஒரு நாள் சீன பேரரசர் ஷேனுங்கின் வெந்நீர் பானையில், காற்றில் மிதந்து வந்த தேயிலை விழுந்தது. தேயிலையின் ரசம் கலந்த அந்த நீரை பேரரசர் மிகவும் ருசித்து பருகினார். அந்த பானத்துக்கு அவர் வைத்த ச்சா, அதன் பொருள் விசாரிப்பது அல்லது சரிபார்ப்பது. அன்றிலிருந்து தேயிலையின் பயன்பாடு ஆரம்பமானது.

ஆரம்ப காலங்களில் தேநீர், மருத்துவ தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தேயிலையை சீனர்கள் கவனமாக வளர்த்தனர். தேயிலை பறிக்கும் இளம் பெண்கள் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் வாசம் அந்த பெண்களின் விரல்களின் வழியாக, தேயிலையின் தன்மையை பாழாக்க கூடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதல் டீ

தொடக்க காலத்தில் க்ரீன் டீ என்ற வகை மட்டுமே புழக்கத்தில் இருந்தது. சீனாவில் இருந்து தேயிலையை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கினர். இந்த கடல் கடந்த பயணமே பிளாக் டீ எனும் மற்றொரு வகை உருவாக காரணமாக அமைந்தது.

அன்றைய நாளில், பெரும் ஆதிக்க நாடாக விளங்கிய ஆங்கிலேய அரசும் கூட, தேநீரின் தேவைகளுக்காக சீனாவையே சார்ந்து இருந்தது. தேயிலைக்கு நிகரான வெள்ளியை ஆங்கிலயேர்கள் பண்டமாற்று செய்து கொண்டனர்.

சீனாவுடன் போட்டியிட எண்ணிய ஆங்கிலயேர்கள், தேயிலையை பயிரிட திட்டமிட்டனர். தேயிலை பயிரிடுவதற்காக இந்தியாவின் வடமேற்கு பகுதியை தேர்ந்தெடுத்தனர்விதைகளை பயிர் செய்த ஆங்கிலேயர்கள், அதை வளர்க்கும் முறையில் வெற்றி பெறவில்லை.

ராபர்ட் போர்டுன் எனும் ஆங்கிலேய தாவரவியல் அறிஞர், சீனாவில் உளவு பார்த்து தேயிலை வளர்ப்பு முறையை அறிந்து கொண்டார். அதற்கு பின்னர் ஆங்கிலேயே அரசு 1836-ம் ஆண்டு இந்தியாவில் முதல் தேயிலை தோட்டத்தை உருவாக்கியது.

ஆனால், சீன தேயிலை வளர்ச்சிக்கு இந்தியாவின் இயற்கைசூழல் உகந்ததாக இல்லை. இதற்கான மாற்று வழியை கண்டறிய எண்ணிய ஆங்கிலேய அரசு, புதிய வகை தேயிலையை 1837-ல் அஸ்ஸா மிக்கா எனும் இந்த தேயிலை வகை, இந்தியாவில் இப்போதும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

தற்போது, தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.


Comments

Popular posts from this blog

எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்

வாடன் சம்பா (Vadan Samba Rice)