அருகம்புல் சாறு
எந்தவித பராமரிப்பின்றி தானாகவே வளர கூடிய அருகம்புல், பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த அற்புத மூலிகை தரும் பயன்கள் சில:
அருகம்புல் சாறை தினமும் அருந்தி வருவதால், வாய் துர்நாற்றம் நீங்கும். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் குணமாகும். வாய்க்குள் நச்சுக்கிருமிகள் வளர்வதை தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பற்களின் சுத்தத்தை அதிகரிக்கும்.
ஆஸ்துமா
மூச்சு திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு அருகம்புல் சிறந்த மருந்தாகும். இவற்றால் அவதிப்படுபவர்கள், அருகம்புல் சாறை தினமும் பருகுவதால் விரைவாக குணம் பெறலாம்.
சரும பிரச்சனைகள்
தேமல், படை, புண்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு, அருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து, தொடர்ந்து அருந்தி வரலாம். இதனை அதிகாலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பாக பருகுவது சிறந்த பலனை தரும். அருகம்புல் சாறு அருந்தி, 2 மணி நேரம் கழித்த பின்பு காலை உணவை சாப்பிடலாம். அருகம்புல்லை, மஞ்சள் கிழங்குடன் சேர்த்து அரைத்து படை, தேமல் போன்ற சரும பிரச்சனைகள் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும்.
எடை குறைப்பு
தினமும் அதிகாலையில், காலை உணவுக்கு முன்பாக அருகம்புல் சாறு பருகி வந்தால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். இதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும்.
நச்சு நீக்கம்
அருகம்புல் சாறு, சிறந்த நச்சு நீக்கியாகும். தற்போதைய அவசர வாழ்க்கை முறையில், நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள், உடலுக்குள்ளே தேங்கி விடுகின்றன. இவற்றை நீக்குவதற்கு அருகம்புல் உதவுகிறது.
தினசரி காலையில், அருகம்புல் சாறு அருந்தி வருவதால் உடலினுள் தேங்கியுள்ள நச்சு பொருட்கள், சிறுநீர் மற்றும் வியர்வை வாயிலாக வெளியேறுகிறது. இதற்கு அருகம்புல் சாறை, சமஅளவு தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
ரத்தப்போக்கு
மாதவிடாய் ஏற்படும்போது,
சில பெண்கள் அதிகப்படியான ரத்தப்போக்கால் அவதிப்படுவார்கள். இதற்கு அருகம்புல் சாறு நல்ல தீர்வாகும். இதனை அருந்தி வந்தால், ரத்தப்போக்கு சீராகும்.
கண், காது மற்றும் மூக்கு
அருகம்புல்லுடன், மாதுளை இலையை சேர்த்து அரைத்து, வடிகட்டி, தினமும் ஒரு டம்ளர் அளவு பருகி வந்தால், கண், காது மற்றும் மூக்கில் கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அருகம்புல் சாறுடன் சம அளவு தண்ணீர் கலந்து, தொடர்ந்து பருகி வந்தால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
உடல் வெப்பம்
அருகம்புல்லை நிழலில் உலர்த்தி தூளாக்கி கொள்ளவும். 2 தேக்கரண்டி தூளுடன், பசுவின் பாலிலிருந்து தயார் செய்யப்பட்ட வெண்ணெய் 1 தேக்கரண்டி கலந்து, தினமும் உண்டு வந்தால், உடல் சூடு தணியும், உடல் பலம் அதிகரிக்கும்.
Comments
Post a Comment